தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - ராஜ் டி.வி இயக்குநர் மகள் திருமண அறிவிப்பு!-வீடியோ

Filmibeat Tamil 2017-10-24

Views 643

சென்னை : 'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ். இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார்.

அபினேஷ் இளங்கோவனுக்கும் பல வெற்றிப் படங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகளான நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் சித்ரா லக்ஷ்மணன், அபி & அபி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

வரும் அக்டோபர் 27-ம் தேதி அன்று இவர்களின் திருமணம் திருவான்மியூரில் நடக்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு மணமகன் அபினேஷ் இளங்கோவன் அனைவருக்கும் அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.


The engagement took place last July for 'Abi & Abi pictures' Abinesh Ilangovan and Nandini, daughter of RAJ TV director Ravindran. On October 27th, their marriage will be held in Thiruvanmiyur.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS