நெகிழ்ச்சி! பெற்ற மகனை கொன்றவனை கட்டிப்பிடித்து அழுத தந்தை..வீடியோ

Oneindia Tamil 2017-11-10

Views 18.5K

அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றிருக்கான தீர்ப்பு நேற்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. பலரால் கவனிக்கப்பட்டு வந்த இந்த கொலை வழக்கில் 'அலெக்ஸாண்டர் ரெல்போர்ட்' குற்றளவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் சில நாட்களுக்கு முன்பு அப்துல் முனிம் என்பவரின் மகனை கொன்றதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு 31 வருடம் சிறை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வாங்கியவுடன் அப்துல் முனிம் சென்று அந்த கொலையாளியை கட்டிப்பிடித்து கதறி அழுது இருக்கிறார். மேலும் அவரை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

வாஷிங்டனின் கெண்டகி நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் சில நாட்களுக்கு முன்பு பட்ட பகலில் கொலை ஒன்று நடைபெற்றது. சலாஹுதீன் என்ற நபர் இந்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது வயிற்றில் குத்தப்பட்ட கத்தி கூட எடுக்கப்படாமல் அப்படியே அப்பார்ட்மெண்ட் தரையில் படுத்தக் கிடந்தார். இந்த கொலை வாஷிங்கடனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தபட்டர்வர்கள் என கூறப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கத்தியில் எந்த கை ரேகையும் இல்லாத காரணத்தால் போலீசார் இந்த கொலை வழக்கை நிரூபிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கில் 'அலெக்ஸாண்டர் ரெல்போர்ட்' என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

Father Hugs a man who involved in his son's ki1ling in America. He said to the court that he has forgive him for what he did.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS