23 வயது ஃபேஷன் டிசைனரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல டிவி நடிகர் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஹத் உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பியூஷ் சஹ்தேவ்(35). 23 வயது ஃபேஷன் டிசைனரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
27ம் தேதி வரை அவரை ஜாமீனில் வெளியே விடப் போவது இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பியூஷ் கடந்த 6 மாதமாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். பியூஷுக்கும் வேறு ஒரு பெண்ணும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பற்றி அறிந்தே அவரின் மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. ஃபேஷன் ஷோ ஒன்றுக்கு சென்ற இடத்தில் பியூஷுக்கு 23 வயது ஃபேஷன் டிசைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 மாத காலமாக அவர் அந்த பெண்ணுடன் திருமணம் ஆகாமலேயே கணவன், மனைவி போன்று வாழ்ந்துள்ளார். பியூஷின் செல்போனில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது. அது யார் என்று கேட்டதற்கு அவர் அந்த ஃபேஷன் டிசைனரை பிரிந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த ஃபேஷன் டிசைனர் கேட்க அது எல்லாம் முடியாது என்று மிரட்டியுள்ளார் பியூஷ். மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டு தனது கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறி நாடகமாடியுள்ளார்.