விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் இன்று புதிதாக ஒரு முத்திரையை பதித்துள்ளது. நாக்பூரில் இலங்கை அணியை இந்தியா, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், ஒரு வரலாற்று சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட், மழை உதவியால் டிராவான நிலையில், நாக்பூரில் 2வது டெஸ்ட் நடைபெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்களும், இந்தியா 610 ரன்களும் எடுத்தன. இந்தியாவிடம் 4 விக்கெட்டுகள் கைவசம் இருந்தபோதிலும், டிக்ளேர் செய்திருந்தது. இந்தியா, 405 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2வது இன்னிங்சில் இலங்கை நேற்று மாலை பேட்டிங்கை ஆரம்பித்தது.
இன்று ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 166 ரன்களுக்கே ஆல்அவுட்டானது. அஸ்வின் 4, இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா மர்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒரு சாதனையாகும்.
India defeated Sri Lanka by an innings and 239 runs. Indian team equaled their previous record for the biggest Test victory.