சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட அந்த வெள்ளத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஒரு நாள் இரவில் கொட்டித் தீர்த்த மழை, செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறப்பு போன்றவற்றால் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தில் தத்தளித்தது சென்னை மாநகர். முதல் மாடி வரை ஏற்பட்ட வெள்ளத்தால் உணவு உடை வீட்டில் இருந்த பொருட்கள் என அனைத்தையும் இழந்து தவித்தனர் மக்கள். குளிக்க குடிக்க தண்ணீர் இன்றி பெரும் அவதிக்கு ஆளாயினர்.
ஏராளமானோர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னையின் பல இடங்களில் படகு சவாரி பயன்படுத்தப்பட்டது.
சென்னையை திணறடித்த இந்த வெள்ளம் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வெள்ளத்திற்கு காரணம் என்னவென்று பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Why Chennai affected by flood in 2015 BJP National secretary H Raja explaines. No deepa arathana for Pampan swamigal that is the reason Chennai affected by flood he said.