ஆர்கே நகரில் 59 பேர் போட்டி...மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது!- வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 7.4K

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்துள்ளது. இறுதிப் பட்டியல் படி 59 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல், பரிசீலனை முடிந்தது. சுமார் 145 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, 73 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 3 மணியுடன் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் 13 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர் இதனால் 59 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதிப் பட்டியலில் நடிகர் விஷாலின் மனு ஏற்கப்படவில்லை.

அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, தினகரன் உள்பட ஏராளமான வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலான வேட்பளார்கள் சுயேச்சைகள் என்பதால் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பலர் ஒரே சின்னத்தைக் கோரும் போது குலுக்கல் முறையில் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். இடைத்தேர்தலில் தினகரன் கோரியுள்ள தொப்பி சின்னத்திற்கு கடுமையான போட்டி உள்ளதால், அந்த சின்னம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.


Time alloted to withdraw nominations of RK nagar by polls ends and noone came forward to withdraw their nomination. The final candidates list with the symbols would be officially released by ECC today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS