டாவின்சி ஓவியத்தை ஏலம் எடுத்த சவுதி முடி இளவரசர் -3 ஆயிரம் கோடிக்கு வாங்கினார்!

Oneindia Tamil 2017-12-08

Views 5

டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று 3 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அந்த ஓவியம் மிகவும் புகழ்பெற்ற பழைய ஓவியம் ஆகும்.
அந்த ஓவியத்தை வாங்குவதற்காக உலகின் பல நாடுகளில் இருக்கும் பணக்காரர்களும் , கோடீஸ்வரர்களும் காத்து இருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த ஓவியம் ஏலத்திற்கு வராமல் போனது.
தற்போது சரியாக ஒருமாதம் முன்பு அந்த ஓவியம் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது யார் அந்த ஓவியத்தை வாங்கியது என்று தகவல் வெளியாகி உள்ளது.டாவின்சி வரைந்ததிலேயே மோனலிசா ஓவியம் தான் மிகவும் புகழ்பெற்ற ஓவியம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அவர் வரைந்த இன்னும் 19 ஓவியங்கள் அதே போல புகழோடு இருக்கிறது. அந்த ஓவியங்களில் ஏதாவது ஒன்றை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாதா என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதில் முக்கியமான ஒரு ஓவியம் தான் 'சால்வெட்டார் முந்தி'. இயேசுவின் ஓவியமான இது மிகவும் புகழ் பெற்றது.

அந்த ஓவியத்தில் இயேசு கையில் உலகத்தை தாங்கி பிடிப்பது போல் இருக்கும். இன்னொரு கையில் விரல்களை மடக்கி இருப்பார். இந்த ஓவியம் ஒரு மாதம் முன்பு ஏலத்திற்கு வந்தது. அப்போது அதை வாங்க பலரும் போட்டியிட்டனர். அந்த நிலையில் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு ஒருவர் அந்த ஓவியத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுத்தார்.

இந்த ஏலம் நேரில் வந்து எடுக்கப்படாமல் ஒரு போன் கால் மூலம் எடுக்கப்பட்டது. இதனால் யார் ஏலம் எடுத்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. மேலும் ஓவியத்தை வாங்கும் போது யார் ஏலம் எடுத்தது என்று கண்டுபிடித்து விடலாம் என்று கூறினார்கள். ஆனால் ஓவியத்தை வாங்க மூன்றாவது நபர் ஒருவர் வந்து இருந்ததால் அதன் மூலமாகவும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

The Da Vinci painting has bought buy Saudi crown prince for 450 million dollar. The Saudi crown prince Mohammed bin Salman is the actual buyer of a painting.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS