இலங்கைக்கு எதிரான நேற்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றிருக்கலாம், ஆனால், டோணி மட்டும் சில காரணங்களால் ஸ்டாராக ஜொலித்தார்.
கோஹ்லி ஓய்வில் உள்ள நிலையில், தொடக்க வீரரான ரோகித் ஷர்மா தலைமையில் கமிளங்கியது இந்திய அணி. ஆனால், கேப்டனுக்குரிய பொறுப்போடு பேட்டிங் செய்தது என்னவோ, முன்னாள் கேப்டனான, டோணிதான்.
இந்திய அணி 38.2 ஓவர்களில், 112-10 ரன்களுக்கு ஆல்-அவுட்டானபோதிலும், டோணி மட்டும் நங்கூரம் பாய்ச்சி நின்று 65 ரன்கள் எடுத்தார். டோணியும் மற்ற பேட்ஸ்மேன்களை போல நடையை கட்டியிருந்தால் கதை இதைவிட மோசமான கந்தலாகியிருக்கும்.ஆனால் இப்போது விஷயம் அவரது டிரேட் மார்க்கான பேட்டிங்கை பற்றியல்ல. டோணி ஸ்டைலான டிஆர்எஸ் முறையை கணிக்கும் ஸ்பெஷல் திறமை பற்றியது. கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய வீரர்கள் டிஆர்எஸ் விஷயத்தில் எப்போதுமே தடுமாறுவது வழக்கம். ஆனால் அதில் டோணி மட்டும் விதி விலக்கு. அவரது கணிப்புகள் பெரும்பாலும் சரியானதாக இருக்கும்.
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. நடுவர் அவுட் என்று சொல்ல கையை உயர்த்திக்கொண்டிருந்தபோதே, டோணி, டிஆர்எஸ் சோதனைக்கு பரிந்துரைக்குமாறு சொல்லிவிட்டார். நடுவர் முழுவதுமாக கையை தூக்கி முடிக்கும் சில வினாடிகளுக்குள் டோணி இது அவுட் இல்லை என கணித்து, டிஆர்எஸ் கேட்டார். டோணி கணித்ததை போலவே, டிவி ரிப்ளேயில் பார்த்த 3வது நடுவர், இது அவுட் இல்லை என தெரிவித்துவிட்டார். நடுவருக்கே, கணிக்க சொல்லி கொடுத்துவிட்டார் டோணி.
Former India captain MS Dhoni on Sunday maintained his hugely impressive record of reviewing decisions correctly on the Decision Review System.