பிரபல தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் புகார் !!

Filmibeat Tamil 2017-12-14

Views 2

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஒரு அரக்கன் என்று நடிகை சல்மா ஹாயக் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட தயாரிப்பாளர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சில நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல நடிகைகள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக் வெயின்ஸ்டீன் பற்றி கூறியிருப்பதாவது,
பல ஆண்டுகளாக வெயின்ஸ்டீன் தான் என்னுடைய அரக்கன். அந்த ஆளுக்கு முடியாது என்று சொன்னால் பிடிக்காது. கண்ட நேரத்தில் என் ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். ஆனால் நான் மசியவில்லை.
தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார் மறுத்துவிட்டேன். எனக்கு ஓரல் செக்ஸ் செய்ய வேண்டும் என்றார் முடியாது என்றேன். சேர்ந்து குளிக்கலாம் என்றார் மாட்டேன் என்றேன். நீ குளி நான் பார்க்கிறேன் என்றார் அதற்கும் முடியாது என்றேன்.
வெயின்ஸ்டீன் கேட்டதற்கு எல்லாம் முடியாது என்று நான் கூறியதால் அவர் என் மீது கோபம் அடைந்தார். நான் நடித்த ப்ரீடா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை செய்தார்.
ப்ரீடா படத்தில் வேறு ஒரு நடிகையுடன் உறவு கொள்ளும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று மிரட்டினார். அந்த ஆளுக்காக நான் நிர்வாணமாக நடித்ததை நினைத்து வருந்தினேன். ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய வேறு வழியில்லாமல் அந்த காட்சியில் நடித்தேன். நானும், ப்ரீடா பட இயக்குனரும் அழுத்தம் கொடுத்ததால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தார் வெயின்ஸ்டீன் என்று சல்மா தெரிவித்துள்ளார்.


Popular Hollywood actress Salma Hayek has called producer Harvey Weinstein as a monster. She explained in detail how he tortured her and was after her expecting sexual favours.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS