இந்த மாதம் இறுதியில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி | வீடியோ

Oneindia Tamil 2017-12-14

Views 4.9K

நடிகர் ரஜினிகாந்த் வரும் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை தனது இரண்டாவது கட்டமாக சந்திக்கப் போகிறார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கப் போகிறார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது பற்றிய விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் 1996ஆம் ஆண்டில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசியது எதிர்பார்ப்பை மேலும் வலுவாக்கியது. போர் வரட்டும் என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றினார் நடிகர் ரஜினி.

ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்.
நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார். ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன.

After meeting his fans during a 5-day initiative in May, actor Rajinikanth said that he would meet the rest of his fans from 26 to 31 on December.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS