ஓகி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உயிரிழந்த மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலின் தாக்கத்தால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மா,பலா, தேக்கு, ரப்பர் உள்ளிட்ட மரங்களும் பயிர்களும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். மேலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் உயிரிழந்த்துடன் ஒருசில மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். புயலால் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் இன்று குமரி மாவட்டம் முழுவதிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
Des ; The entire blockade is being held in Kanyakumari district for demanding relief for the fishermen and the fishermen who were affected by the storm.