திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்குக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. திருப்பூர், பாண்டியன் நகரை சேர்ந்த, பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவி 2 நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த பக்கம் சென்ற வாலிபர் ஆளில்லாத ஒரு இடத்தில் திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.திடீரென வாலிபர் ஒருவர் தன்னிடம் இப்படி நடந்ததால் அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சல் போட்டார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் விடவில்லை திருப்பூர்வாசிகள். விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பெண்களும் சேர்ந்து கொண்டு, அந்த காமுகனை உதைத்தனர்.
திடீரென வாலிபர் ஒருவர் தன்னிடம் இப்படி நடந்ததால் அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சல் போட்டார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் விடவில்லை திருப்பூர்வாசிகள். விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பெண்களும் சேர்ந்து கொண்டு, அந்த காமுகனை உதைத்தனர்.
அடி வாங்கிய பிறகு, அக்கா, அக்கா என காமுகன் கத்த தொடங்கினான். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. இது வைரலாக பரவி வருகிறது.
A young man who misbehave with a lady who walks on a road in Tirupur is beaten up by people and the video is goes viral.