தமிழகத்தை காப்பாற்ற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அன்புமணி அழைத்ததாக செய்திகள் திரிக்கப்பட்டு சில ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வெளியிடப்படுகின்றன. ஆனால் இவை உண்மைக்கு புறம்பானவை. மதுரையில் பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தமிழகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. அதை காப்பாற்ற ரஜினி சீக்கிரமே அரசியல் களத்தில் குதிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆபத்தான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க நிறைய பேர் தேவைப்படுகிறார்கள் என்று அன்புமணி கூறியதாக செய்திகள் வெளியாகின. ரஜினி தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மே மாதம் கூறியபோதே தமிழகத்துக்கு தேவை நடிகர்கள் அல்ல, நல்ல நிர்வாக திறமைசாலிகள். அது ரஜினியிடம் இல்லை. நடிகர்கள் நாடாண்டது போதும் என்று ரஜினிக்கு எதிராகவே பாமக பேசி வந்தது. இந்நிலையில் ரஜினி குறித்து பாமகவின் திடீர் நிலைப்பாடு என்ற ரீதியிலேயே இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆனால் அவர் மதுரையில் பேசியது இவை தான். "தமிழகம் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. முதலில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், பிறகுதான் முன்னேற்ற வேண்டும். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக அறிவிக்க உள்ளோம்" என்று தான் தினகரன் கூறியிருந்தார். இதுதான் அவரது உண்மையான பேச்சு.
Anbumani Ramadoss says Tamilnadu is in ICU, first it should be protected after that progression is important. But some media channels published that Anbumani invites Rajini to protect TamilNadu.