கமலை திட்டும் டிடிவி தினகரன்- வீடியோ

Oneindia Tamil 2018-01-04

Views 1

ஆர்.கே நகர் மக்களை கமல் அவமானப்படுத்திவிட்டதாக டிடிவி தினகரன் பேசி இருக்கிறார். மேலும் ஆர்.கே நகர் வெற்றி குறித்த கமலின் கருத்திற்கும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி பணத்தின் மூலம் கிடைத்த வெற்றி என்று கமல்ஹாசன் பேசி இருந்தார். கமலின் இருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கமலின் கருத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் கமலின் கருத்து ஆர்.கே. நகர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியுள்ளார். பணம் வாங்கி மக்கள் ஓட்டு போட்டதாக கூறுவது மிகவும் தவறானது என்றும் அவர் கூறினார்.


Dinakaran condemns Kamal for his speech on RK Nager result. Later Kamal said that RK Nager victory came by money power not by people power.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS