ரஜினி காட்டும் பாபா சிம்பல் ஒரிஜினல் கிடையாதாம் போலியாம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 3

ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டத்தில் இருந்தே அவர் தினமும் செய்திகளில் வந்துவிடுகிறார். அரசியலுக்கு வந்தால் கூடவே சர்ச்சையும் வரும் என்பதால் தினமும் ஏதாவது சர்ச்சையும் வந்துவிடுகிறது. அவர் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இணையத்தளம், டிவிட்டர் பக்கம் தொடங்கி இருக்கிறார். அவரது இணையதளத்தில் ரசிகர்கள் வரிசையாக தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த இணையத்தில் இருக்கும் லோகோவும், ஸ்லோகனும் மீண்டும் சர்ச்சை ஆகி இருக்கிறது. சிவாஜி படத்தில் முதல் பாதியில் ரஜினிக்கு வரும் இன்னல்கள் போல இப்போது அவருக்கு இன்னல்கள் அதிகரித்து இருக்கிறது.

ரஜினியின் இணையதளமான 'www.rajinimandram.org' என்பதில் பாபா சின்னம் ஒன்று இருக்கிறது. இதில் இருக்கும் பாபா சின்னம் ரஜினியின் டிரேட் மார்க் சிம்பிள் ஆகும். பாபா படத்தில் இருந்து ரஜினி ரசிகர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். மேலும் ரஜினி கட்சியின் சின்னம் இதுவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் இருக்கும் நிறுவனம் ஒன்றும் இந்த முத்திரைக்கு உரிமை கோரி இருக்கிறது. இந்த முத்திரை எங்களுடையது என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. 'வொக்ஸ்வெப்' என்ற ஊடக நிறுவனம் இந்த பிரச்சனையை எழுப்பி இருக்கிறது.

Rajini's new website ''www.rajinimandram.org'' has lot of important things. The logo has derived from the 'Ramakrishna Math' logo. The baba symbol may be his new party symbol. At the same time Rajini has uses the same slogan of a textile company which is Unami Ulaippu Uyarvu. Now a company in Mumbai says that its their logo since 2016.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS