பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் அன்று பொது மக்கள் சுற்றுலாத் தளங்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம்.
நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர். காணும் பொங்கல் பாதுகாப்பு பணிக்கு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்களில் அதிக அளவில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்களை மக்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வருகின்றனர்.
People all over tamilnadu celebrated pongal with joy at different venues. This is called as tamilar thiurnal. People made a sweet dish called pongal and celebrated pongal. This pongal is known as the farmers festival as they celebrate the harvest time of the year. they all gathered at marina and celebrated the festival with josh.