பஸ் கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டத்தை திரும்ப பெற முடியாது - கல்லூரி மாணவர்கள்

Oneindia Tamil 2018-01-24

Views 5

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி 3வது நாளாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது மாணவர்களின் கருத்து. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டம் தொடரும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அரசு அறித்த பின்னரும் அதை கண்டு கொள்ளாத மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறி 3வது நாளாக இன்று போராடி வருகின்றனர். மதுரை, கும்பகோணம், ராஜபாளையம், நாமக்கல், பெரம்பலூர் என்று பல ஊர்களில் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரைக்கல்லூரி மாணவர்கள் காலை முதலே வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் மூலக்கரை அருகே சாலை மறியல் செய்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.

நாமக்கல் ராசிபுரம் சாலையில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறி அரசுக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

தஞ்சை மாவட்டம் கரந்தை உமாமகேஸ்வரானார் கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக பெரம்பலூர் பாரதி தாசன் உறுப்பு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


College students in different parts of Tamil Nadu staged protests on Wednesday demanding that the state government roll back the hike in bus fares.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS