நடிக்கத் தான் வரவில்லை, இப்படியாவது செய்வோம் என்று செய்திருக்கிறார் போல என்று வாரிசு நடிகையை பற்றி கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.
ஆளானப்பட்ட நடிகர் திலகத்தையே நடிப்பில் மிரட்டியவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வாரிசு நடிகை ஒருவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் அறிவிப்பு வந்தபோதே நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு சரிபட்டு வர மாட்டார் என்று பலரும் கூறினார்கள்.
இயக்குனர் அதை எல்லாம் கேட்டும் கேட்காதது போன்று பட வேலையை துவங்கினார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு நடிகைக்கு நடிப்பே வரவில்லையாம். அப்பேர்பட்ட நடிகையை போன்று நடிக்க வாரிசு நடிகையும் எவ்வளவோ முயன்றும் முடியவே இல்லையாம். நடிப்புக்கு பெயர் போனவர் படத்தில் நடிப்பே வராத ஒருவர், என்ன கொடுமை சார் இது என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். படம் வரட்டும் பார்க்கலாம் என்று உள்ளனர் ரசிகர்கள்.
Kollywood is reportedly making fun of an young actress who has given special gift to her team of her latest movie. She is struggling to act properly in that movie.