ஜுனியர் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து | Oneindia Tamil

Oneindia Tamil 2018-02-03

Views 1

உலக ஜூனியர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நியூஸிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இறுதிப்போட்டியில் மோதிய ஆஸ்திரேலியாவை 47.2 ஓவர்களில் ஆல்அவுட்டாக்கிய இந்திய அணி 38.5 ஓவர்களில் வெற்றியை ருசித்தது.

இதன்மூலம் 4வது முறையாக இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அலுங்காகமல் குலுங்காமல் கோப்பையை தட்டியுள்ளது இந்திய அணி.
சாதனை படைத்த இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜூனியர் அணியின் கோச் ராகுல் டிராவிட் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

India has won the junior world cup. Sachin, sehwag, BCCI acting president CK Khanna congratulates Rahul Dravid for his coach.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS