துப்பாக்கி சூட்டில் தன் நண்பனை இழந்த சிறுமிக்கு அதிபர் டிரம்ப் கடிதம்..வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 2.3K


துப்பாக்கி சூட்டில் தன் நண்பனை இழந்த சிறுமி ஒருத்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு பின் டிரம்ப் கடிதம் எழுதி இருக்கிறார்.

ஏவா என்ற அந்த சிறுமிக்கு கடந்த கிறிஸ்துமஸ் அன்று அவர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது ஏவாவின் அம்மா மூலம் அந்த கடிதம் பொதுவில் வெளியாகி இருக்கிறது.

ஏவாவின் வாழ்க்கையில் நடந்த சில மோசமான சம்பவங்களும், அதன் பின் அந்த சிறுமி அதிபருக்கு எழுதிய கடிதமும், அதற்கு அவர் எழுதிய பதிலும் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது.15 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏவா படிக்கும் பள்ளியில் திடீர் என்று ஒரு இளைஞன் புகுந்து துப்பாக்கியால் தாக்குதல் நடந்தி இருக்கிறான். இதில் 3 பேர் மரணம் அடைந்தார்கள். அந்த பள்ளியில் படித்த பலருக்கு மோசமாக காயம் ஏற்பட்டது.



America President Donald Trump sends sentimental letter a school girl. This letter came out public, in which he got emotional about the girl's sad life story.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS