காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஏன் நமக்குரிய பங்கை தர கர்நாடகா மறுக்கிறது என்று இருவரும் கேள்வி எழுப்ப வேண்டும், ஆனால் அவர்கள் ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்கமுடியாது, ஏனெனில் இது அவரவர் விருப்பம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்குமாறு தமிழக அரசு கர்நாடக அரசு பல அழுத்தங்களைத் தந்து வருகிறது. இது தொடர்பாக நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைமையை எடுத்துக் கூற நேரம் ஒதுக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால் இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
மாறாக கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவிரி நீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்திக்கும் போது இதே கருத்து முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கபினி அணையில் போதுமான நீர் இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்தை காப்பாற்ற தேவைப்படும் 8 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்காக கர்நாடகா வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்திற்கான நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Actor Vishal says it is good if Rajinikanth and Kamalhaasan raise voice against Karnataka denying the cauvery water share to Tamilnadu.