அம்மா ஸ்கூட்டர் திட்டம், அப்செட்டான அரசு- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 27

மானியத்தில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு அரசு எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வராததால் விண்ணப்பிக்கும் கால கெடுவை நீடித்துள்ளனர்

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தார் .அதன் படி ஆண்டு தோறும் அவரது பிறந்த நாள் அன்று ஒரு லட்சம் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . வருடத்திற்கு 2.5 லட்சம் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் இருந்தால் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் படி அனைத்து மாவட்டத்திலும் உள்ளம் மண்டல அலுவலங்களில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வந்தன .இந்நிலையில் மானியத்தில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு அரசு எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வராததால் விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கால கேடு இம்மாதம் 10 தேதி வரை நீடிப்பு செய்துள்ளனர் . கால நீடிப்பிற்கு பிறகாவது கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் வரும் என்று அதிமுக அரசு எதிர்பார்த்துள்ளதாக தெரிகிறது

Des : They have extended the deadline for applying for the scarcity of the government to purchase scooter

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS