பக்கோடா விற்ற வழக்கறிஞர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 1.6K

பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பகோடா பேச்சு எதிர் தெரிவித்து உயர் நீதிமன்ற வாயில் முன் வழக்கறிஞர்கள் பக்கோடா மேளா நடத்தி பக்கோடா தயாரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை இல்லா திண்டாட்டம் பற்றி பேசிய பிரதமர் மோடி வங்கி லோன் மூலம் கடன் பெற்று பக்கோடா விற்று நாளொன்றுக்கு 200 சம்பாதிக்கலாம் என்றால் பட்டதாரிகள் பக்கோடா விற்கவேண்டும் என்று பேசியதற்கு நாடு முழுதும் கண்டனம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வாயில் முன்னர் கேஸ் அடுப்பு பெரிய கடாய் வைத்து வழக்கறிஞர்கள் பட்டமளிப்பு உடையுடன் பக்கோடா தயாரித்தனர்.வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒட்டி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வழக்கறிஞர்கள் பக்கோடா தயாரிப்பதை அங்கிருந்தோர் வேடிக்கை பார்த்தனர். பின்னர் வழக்கறிஞர்கள் தாங்கள் தயாரித்த பக்கோடாவை பொதுமக்களுக்கும், சக வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் விநியோகித்தனர்.

பின்னர் பேசிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறினார் ஆனால் தற்போது படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் பிரதமர்.பக்கோடா விற்பது கேவலமான தொழில் இல்லை, ஆனால் இவர்கள் சொன்னபடி படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்காமல் உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து அதானி அம்பானிகளை வாழ வைக்கிறார் என்று கூறினார்.

மேலும் தமிழசையை நல்ல மருத்துவரிடன் சென்று பார்க்க வேண்டும் என்றும் அமித்ஷா தனது மகனை பக்கோடா விற்க சொல்லுங்கள் என்றும் கூறினார்

Des : Prior to Modi's controversial pacada speech, the lawyers in front of the high court were conducting the Pyoda mela and were preparing for the preparation of Pyoda.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS