கமல் தலைப்பு செய்தி தான் ஆக முடியும்.. தலைவராக அல்ல..!!

Oneindia Tamil 2018-02-21

Views 4.8K

அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாகலாம் ஆனால் தலைவராக முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். காலையில் அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற அவருக்கு கலாம் குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர்.

கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிர்வாதம் பெற்ற கமலுக்கு கலாமின் பேரன் சலீம் நினைவுப்பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தனது கட்சிப் பெயரையும் சின்னத்தையும் அறிவிக்கிறார் கமல்ஹாசன்.

Tamilnadu BJP leader Tamilisaid has said that. Actor Kamalhaasan can be a head line news but he can not be political head.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS