பெங்களூரில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபர்கள் இருவர் போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டனர். பெங்களூர், பெல்லந்தூர் சர்ஜாபுரா ரோடு பகுதியில், வசித்து வரும் 28 வயதுள்ள ஒரு பெண்ணை கடந்த 18ம் தேதி இரவு சிலர் காரில் கடத்தியுள்ளனர். அந்த வழியாக சென்ற சிலர் இதைப்பார்த்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தினர்.