காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி கரையோர மாவட்டங்களில் தொடர் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் பன்னெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதை மத்தியில் உள்ள அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதும் இல்லை, கர்நாடக அரசு ஒத்துழைப்பு அளிப்பதும் இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அரசியல் அமைப்புகளும், விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
TTV Dinakaran announces continuous protest for Cauvery from April 7 to 27 in 9 districts.