சிம்புவுக்கு கர்நாடக மக்கள் இடையே ஆதரவு பெருகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.
தங்களின் தேவைகளை அரசிடம் கூறி பெற முடியாதபோது மக்களுக்காக அவர்கள் போராடுவதில் பயன் இல்லை என்ற உண்மையை போட்டுடைத்தார் சிம்பு.
காவிரி பிரச்சனையை அரசியல்வாதிகள் அல்லாமல் இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா கொடுத்தார் சிம்பு.
அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு மக்களே சமாதானமாக பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற சிம்புவின் ஐடியாவுக்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.
சிம்பு என்ன அருமையான யோசனை தெரிவித்துள்ளார். எங்களுக்கு வன்முறை அரசியல் பிடிக்கவில்லை. சிம்புவை எங்களுக்கு பிடித்துவிட்டது. இனி அவர் படங்கள் இங்கு ரிலீஸானால் அமோக வரவேற்பு கொடுப்போம் என்கிறார்கள் கர்நாடக மக்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிம்பு அரை மணிநேரமாக பேசிய வீடியோவை கர்நாடக மக்கள் தேடிப்பிடித்து பார்த்து வைரலாக்கியுள்ளனர்.
Simbu's video about solving Cauvery issue between Tamil Nadu and Karnataka in a peaceful way has got support from the people of Karnataka.
#simbu #cauveryproest #tamilnadu