ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அடிப்பணிய மறுப்பதால்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றே கண்டனம் தெரிவித்து செய்தி வெளியிட்டார்.| சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய விமானம் தற்போது 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது. அந்த விமானத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் காத்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.