டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3ம் நபர் காப்பீடு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கண்டிக்கும் விதமாக கடந்த 18ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 4ம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக பெங்களுருவில் மத்திய அரசு அதிகாரிகளுடன், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. வரும் 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதால் போராட்டத்தை கைவிட்டதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV