ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் பெயிண்டராக பணியாற்றும் அருள்ராஜ், முகாமில் உள்ள 14 வயது சிறுமியுடன் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் தந்தை தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அருள்ராஜ் மீது ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாளித்துள்ளார். இதன் அடிப்படையில்
போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுமியுடன் அருள்ராஜுக்கு உறவு இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருள்ராஜை ஓசூர் மகளிர் போலிசார் சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV