திருப்பூர் பி.என் ரோடு சாலை உழவர் சந்தை சாலையில் புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை கண்டித்து ஏராளமான மக்கள் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கோரி குடிமகன்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பதற்றமும் நிலவியது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV