வழி தவறி ஊருக்குள் வந்த யானை பேருந்து நிலையத்தில் படுத்திருந்த பெண்ணை மிதித்து தாக்கியது. பின்னர் ஊருக்குள் புகுந்த யானையை வனத்துறையினரும் பொதுமக்களும் போராடி வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதி உள்ளது இங்கு சுமார் இரண்டாயிரத்து மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மலைப் பகுதி என்பதால் வழி தவறி இன்று அதிகாலை வந்த காட்டு யானை ஒன்று கடம்பூர் பேருந்து நிலையத்தில் படுத்திருந்த பெண்னை மிதித்தது இதில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்க ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி விரட்டி பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ஒடிய யானை பவளக் குட்டை என்ற இடத்தில் புதரில் மறைந்து இருந்தது தெரிய வந்தது. தகவல் தெரிந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். சோள தட்டைகாடு, வாழை தோப்பு, பாக்குதோப்பு ஆகியவற்றில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய யானை அங்குமிங்கும் அலைந்து முடியாமல் அப்பகுதியில் இருந்த சாலையில் கீழே மயங்கி சரிந்தது. பின்னர் மீண்டும் பொதுமக்களும் வனத்துறையினரும் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.