தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் மாரியம்மன் கோவில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு புனித நீராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது...
நகரின் முக்கிய வீதிகள் வழியாக 300க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு புனித தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு புனித நீராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்தப் புனித நீராட்டு விழாவின் ஊர்வலமானது ஈரோடு இடையன்காட்டுவலசு ஸ்ரீ ராஜகணபதி கோயில் முன்பாக துவங்கியது. இந்த ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு புனித தீர்த்தம் எடுத்து வந்து இடையன்காட்டுவலசு பிரப் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் - சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் தீர்த குடம் எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
Des : Eroodu Sri Mariamman Mariamman Temple, the famous Eravur Shrine is celebrated for the first Friday of the Holy Spirit.