தமிழக அமைச்சர்கள் வடிவேல் போல் காமெடிகளை செய்து வருவதாக டிடிவி தினகரன்.

Oneindia Tamil 2018-08-25

Views 462

வேலூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முக்கொம்பு அணை உடையாமல் இருக்க அரசு முன் கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் அதனை செய்ய தவறிவிட்டார்கள் என்றார். மேலும் முக்கொம்பு அணை உடைந்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றதுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு மற்றும் அணையின் நிலை எப்படி உள்ளது தெரியவில்லை என்றதுடன் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட இது போன்ற விஷயத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். காவல்துறையில் ஐ.ஜி மீது ஒரு எஸ்பி பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால் குற்றச்சாட்டிற்குள்ளான ஐஜியை மாற்றாமல் புகார் கொடுத்தவரை மாற்றியிருக்கிறார்கள். ஐஜியை மாற்றினால் பிரச்சணை வரும் என்பதால் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறியதுடன் தமிழக அமைச்சர்கள் எல்லாம் வடிவேல் போல் காமெடி செய்கிறார்கள் என்று கூறினார்

TDV Dinakaran said that Tamilnadu ministers are doing comedy films like comedy actor Vadivel

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS