வாகனம் ஓட்டும் மைனர் சிறுவர்கள்..பலியாகும் பல உயிர்கள்!! - வீடியோ

Oneindia Tamil 2019-01-29

Views 246

வடசென்னையில் சிறுவர்கள் தொடர்ந்து வாகனங்களை வீட்டுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.



புதுவண்ணாரப்பேட்டை அப்பார்ட்மெண்டில் குடி இருந்து வருபவர் ராம்ராஜ். இவரது அண்ணன் மகன் 17 வயதான கருப்பசாமி இவரது வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் ராம்ராஜின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை கருப்பசாமி வீட்டில் யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வைத்தியநாதன் சாலை சுந்தரம்பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் காரை வேகமாக செலுத்தி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோர் மீது மோதிவிபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாக திரும்பியதில் வீட்டுக்கு எதிரே உள்ள மரத்தில் மோதி கார் நின்று உள்ளது. இவரைபின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் தர்மஅடி அடித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேற்கொண்டு விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கருப்பசாமியைகைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.



இதே போன்று ஒரு சிறுவனால் ஏற்பட்ட விபத்தில் பொங்கல் நாளன்று 50 வயது மதிக்கத்தக்க பெண் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு தொடரவேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.



Des : Minor boys driving ... Many lives!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS