கொடைக்கானலில் வாக்களிப்பதன் கடமை குறித்து சுற்றுலாத்துறை சார்பில் கல்லூரி மாணவிகள் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருகின்ற ஏப்ரல் 18 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 100 % வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கே ஆர் ஆர் கலையரங்கம் அருகில் கல்லூரி மாணவிகள் சைக்கிள் விழ்ப்புணர்வு பேரணியில் பங்குபெற்றனர் . இந்த பேரணியை கொடைக்கானல் வட்டாச்சியர் வில்சன் கொடியசைத்து தொடங்கிவைத்தார் . 100க்கும் மேற்றப்பட்ட கல்லுரிமாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் பிரிண்ட் பூங்கா அருகில் மகளிர் சுயஉதவி குழு சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் கடமை குறித்து ரங்கோலி கோலமிட்டு கொடைக்கானலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் 100 மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
des: Cycle rally awareness was held for college students on the duty to vote in Kodaikanal