தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.