விஜய் சேதுபதி படத்தில் ஜிவி தங்கச்சி ஹீரோயின்..!

SparkTV Tamil 2019-06-13

Views 1

விஜய் சேதுபதி படத்தில் ஜிவி தங்கச்சி ஹீரோயின்..!

விஜய் சேதுபதி படத்தில் ஜிவி தங்கச்சி ஹீரோயின்..! | Gv Prakash Kumar | Vijay Sethupathiவிஜய் சேதுபதியின் இரண்டாவது நாயகியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதிக்கென இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதல் அவரை ஒரு சர்ச்சையும் பின்தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி தன் படங்களில் மாற்றி மாற்றி ஒருசில நடிகைகளை மட்டுமே நடிக்க வைக்கிறார் என்ற சர்ச்சைதான் அது. காயத்ரி, ரம்யா நம்பீசன், அஞ்சலி என இந்த நடிகைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

அதிலும் குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஆரம்ப நாட்களில் இவர் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஒருகட்டத்தில் அவருடன் இணைந்து நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.



இந்நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பை அண்மையில் துவங்கியுள்ளனர்.
#GVprakashkumar #VIjaySethupathi

Share This Video


Download

  
Report form