கரூர் அரசு காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் பொதுமக்கள் வாங்கல், மோகனூர் செல்லும் பிரதான சாலை உள்ளது அப்பகுதியில் குப்பை கிடங்கு உள்ளதால் குப்பை கிடங்கு பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருவதால் இரவு நேரங்களில் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல அப்பகுதியில் குப்பை கிடங்சில் புகை மூட்டத்துடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான குப்பை எடுத்து செல்லும் வாகனம்,மேலே மூடாமல் பிரதான சாலையில் செல்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மேல் குப்பைகள் பறந்து வந்து மேலே விழுவதால் இதைக் குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து எவ்வித பலனில்லாததால் இன்று கரூர் அரசு காலணி பகுதியிலிருந்து குப்பை கிடங்கு செல்லும் 4 நகராட்சி குப்பை எடுத்துச் செல்லும் வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சிக் அலுவலர்கள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தனர்.முன்னதாக பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்ததால் பள்ளிக்குச் செல்லும் வாகனம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது