புதுக்கோட்டை அருகே சமூக ஆர்வலர் ஒருவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் கெட்டப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகின்றது
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சமூக ஆர்வலரும், நாடக கலைஞருமான இளவரசன் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகைச்சுவை நடிகர் வடிவேல் கெட்டப்பில் நகைச்சுவையுடன் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களிடம் கொரோனா விழிப்புணர்வை நகைச்சுவையுடன் எடுத்துரைத்தார். இதேபோல் டீக்கடை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சமூக ஆர்வலர் இளவரசனின் இந்த விழிப்புணர்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.