ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் covid-19 வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் ஆரவாரமின்றி அமைதியான முறையில் இன்று கொண்டாடப்பட்டது
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் 75வது சுதந்திர தின விழா அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது வழக்கமாக கோவை வஉசி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார் அதனைத்தொடர்ந்து காவல்துறை தீயணைப்பு துறை ஊர்க்காவல் படையினர் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார் அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி கல்லூரிகளை சார்ந்தவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் பரிசுகளும் பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக பல்வேறு சிறப்புகள் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்., ஆனால் covid-19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோவை வஉசி மைதானத்தில் எளிமையாக கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரண் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் உரிய சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து covid-19 வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மருத்துவத்துறை, முன்கள பணியாளர்கள் என 350 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டர்.