ஆவணி மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஆவணி மாதம் வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு மஞ்சள்,பால்,தயிர், சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.ஆவணி மாதம் வரலட்சுமி விரதத்தன்று வந்த வளர்பிறை பிரதோஷ விழாவில் கொரனோ தொற்று தடுப்பு நடவடிக்கையால் வெள்ளி அன்று பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் எளிய முறையில் பிரதோஷ வழிபாடு நடைபெற்று தமிழ் முறைப்படி அர்ச்சனையும் நடைபெற்றது.