#chithiraitv #ஜெய்பீம் படம் மூலம் சமுதாய சண்டைகளை மூட்டி மதமாற்றம் செய்யலாம் பாஜக ஹெச்.ராஜா ஆவேசம் |

chithiraitv 2021-11-15

Views 1

ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் இனம் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பிஜேபி ஹச்.ராஜா பேட்டி...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பிஜேபி கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்..சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரியிலும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார்.ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது.
கருணாநிதி காலத்தில் கட்டபட்ட வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை முடி அதன் மீது கட்ட பட்டது. சட்டத்திற்க்கும் நியமங்களுக்கும் மரியாதை கிடையாது. சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது.அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஹனிமூன் செல்வது மாதிரி ஆறு மாதத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் இரண்டு முடிந்து போய்விட்டது. மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். திமுக அரசு கோவில் கொள்ளை அடிக்க கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ...கோவில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அறநிலையத்துறை அசுரக் கூட்டம், அரக்கர்கள் கூட்டம் கோயில்களை பூட்டுவதற்க்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் உள்ளது. கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார் என கேள்வி எழுப்பினர். கோவில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது கோவில் மீது அத்துமீறி செயல்பட்டாள் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க தயார். கோயம்புத்தூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லை தற்கொலை குறித்த கேள்விக்கு. தப்பு செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் போஸ்கோ சட்டம் உள்ளது யாராக இருந்தாலும் பரவாயில்லை.பள்ளி தாளாளர் மீராஜக்சன் கைது செய்துள்ளார்கள் அதை வரவேற்கிறோம் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். திமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது. உதாரணம் கொளத்தூர் தொகுதியில் மக்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவிலில் கொள்ளை அடிக்கிற திட்டம் தமிழக அரசால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது.காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா என்றார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS