#anmmedia24 #onlyforbjpnews #பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. கரூர் வெங்கமேடு பகுதியில் திரு. வாஜ்பாய் அவர்களின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் தொழிற்பேட்டையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் கரூர் மாவட்டம், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் கோபிநாத், இளைஞரணி மாநில செயலாளர் கார்த்திகேயன் , மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் குணசேகர், இளைஞர் அணி மாவட்டத்தலைவர் கணேசமூர்த்தி, மகளிர் அணி மாநில துணைத் தலைவி மீனா வினோத் குமார், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் நாகமணி, மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு செயலாளர் கைலாசம், மாவட்ட செயலாளர் நவீன் குமார், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், கரூர் நகர வடக்கு பொதுச் செயலாளர் ஆறுமுகம், கரூர் நகர வடக்குத் தலைவர் வடிவேல், கரூர் தெற்கு நகர தலைவர் இளையராஜா, இளைஞரணி மாவட்ட பொருளாளர் குரு பிரசாத், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.