மனைவி, கள்ளக்காதலிகளுடன் ஒன்றாக உறவு!! மனைவி மறுத்ததால் கொலை செய்த முல்லைத்தீவு மன்மதராசா!! நடந்தது என்ன?

vampan 2024-05-28

Views 911

முல்லைத்தீவில் 23 வயதான இளம் மனைவியை கொலை செய்த சந்தேகத்தில் அவரது கணவனையும், கள்ளக்காதலியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, தற்கொலை நாடகம் ஆடினாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முல்லைத்தீவு, பூதன்வயல் பிரதேசத்தில் நேற்று (27) இந்த சம்பவம் நடந்தது.


வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட எஸ்.சுதர்சினி (23) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தனது மனைவி கிணற்றில் குதித்து விட்டதாக கணவன் கூக்கிரலிட்டதையடுத்து, அயலவர்கள் சிலர் ஓடிவந்து, கிணற்றில் விழுந்திருந்த இளம்பெண்ணை மீட்டு, முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்திருந்தார்.

தனது மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.


உயிரிழந்த பெண்ணின் சடலம், உடற்கூராய்வுக்குட்படுத்தப்பட்ட போது, அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, தனது மனைவி இருக்கும் போதே அவரை விடவும் வயதில் குறைந்த கள்ளக்காதலியையும் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்தது தெரிய வந்தது. இது தவிர, மேலுமொரு பெண்ணுடனும் அவர் உறவில் இருந்தது தெரிய வந்தது.

கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், கணவன் மனைவியை தாக்கியுமுள்ளார்.


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை, கழுத்தை நெரித்து கொலை செய்து, கிணற்றுக்குள் வீசி, தற்கொலை நாடகமாடியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில், கள்ளக்காதலியையும் முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS