ரஜினி-கமலின் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?- வீடியோ

Oneindia Tamil 2017-11-11

Views 16.7K

அதிமுக வாக்குகளை ரஜினியும், திமுக வாக்கு வங்கியை கமலும் சூறையாடும் திட்டத்தோடு இருவரும் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருங்காலத்தில் அரசியலில் ரஜினி vs கமல் என்ற சூழ்நிலையை உருவாக்க இருவருமே முடிவு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கமல் தான் கட்சி துவங்க உள்ளதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஜனவரிக்கு பிறகு முழு வீச்சில் அரசியலில் அவர் இறங்குவார் என தெரிகிறதுகமல் அடிமட்ட அளவில் அரசியல் ஆயத்த வேலைகளை ஆரம்பித்துவிட்டார். மக்கள் பிரச்சினைகளை கேட்பது, மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக ஆப் தொடங்குவது என்று அவர் அடிப்படையை பலமாக மாற்றிக்கொண்டுள்ளார். மேலும், பினராயி விஜயன், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி என பாஜக மற்றும் காங்கிரஸ் சாராத கட்சிகளின் முதல்வர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்துள்ளார்.

இந்துத்துவா குறித்து கடும் கண்டனத்தை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்து தீவிரவாதிகளும் உருவாகியுள்ளதாக கமல் தெரிவித்த கருத்து அவரை இடதுசாரி ஆதரவாளராக மக்களிடம் முன்னிருத்தியுள்ளது. மேலும் திராவிடம் என்பது தொடர்ந்து நீடிக்கும் கருத்தாக்கம் என கமல் கூறியுள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்துமே, திமுகவின் அடிப்படை கொள்கைகளோடு தொடர்புள்ளது.

கருணாநிதி உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் திமுக வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்ப கமலின் இந்த கருத்துக்கள் பெரிதாக உதவியுள்ளன. இதை சமூக வலைத்தளங்களிலும் பார்க்க முடிகிறது. திமுக அனுதாபிகளாக அறியப்படுபவர்கள் கமலுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS