பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் சிபிஎம் போராட்டம்!- வீடியோ

Oneindia Tamil 2018-01-22

Views 76

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் அரசு பேருந்தை சிறைபிடித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராரட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடந்து பேருந்தை சிறைபிடித்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


The CPM has been protesting against the bus fares. There is a protest under the leadership of G. Ramakrishnan in Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS