முக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி- வீடியோ

Oneindia Tamil 2018-05-21

Views 2.9K

கர்நாடக மாநில அமைச்சரவையை இறுதி செய்வதற்காக இன்று டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்கிறார். அதற்கடுத்த நாள் வியாழக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவி வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜேடிஎஸ்ஸும் கோரி வருகின்றன. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு குமாரசாமி செல்கிறார்.


Kumarasamy is going to meet Sonia and Rahul Gandhi to finalise the cabinet.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS