கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பயணிகள் பேருந்து இயக்கம்

chithiraitv 2021-12-01

Views 6

கடந்த 21 மாதங்களாக நோய்த்தொற்று காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பயணிகள் பேருந்து நிறுத்தப்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் பாலக்காடு திருச்சூர் கொச்சின் மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பேருந்து இயக்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நோய்தொற்று காலத்தில் அதிகமான பயணிகள் ரயிலில் மட்டுமே பயணம் செய்த நிலையில் தற்போது பயணிகள் பேருந்து இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்
மேலும்., கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சனிடைசர் கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் கோவை கேரள எல்லையான வாலையார் பகுதிகளில் முகாம் அமைத்து அங்கு வரும் நான்கு சக்கர வாகனம் வரும் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் rtpcr சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS