ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குன்னத்தூர் ஆட்டுச் சந்தைக்கு செம்மறி ஆடுகள் அதிக அளவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.மானாவாரி நிலங்களில் மேய்ச்சல் குறைந்து போனதாலும், வெயிலால் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்பதால் சந்தைகளில் விற்பனை செய்ய ஆடு,கோழி வளர்ப்போர் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.